சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
6 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்த எச்ஐவி பாதித்த நபர்; உணவு கொடுக்காமல் சித்ரவதை.!

எச்.ஐ.வி பாதித்த நபர் சிறுமிகளை குறிவைத்து கடத்தி பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஷாஷிபாக் பகுதியில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 2024 மார்ச் மாதம், பெற்றோருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளியூருக்கு வந்தபோது மாயமானனார். இவரை கடந்த பல மாதமாக அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: குப்பையில் சடலமாக கிடந்த சிசு.. இன்ஸ்ட்டா நட்பால் நேர்ந்த விபரீதம்.. 16 வயதில் சோகம்.!
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தேடப்பட்டு வந்த சிறுமி, இறுதியாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜோரி பகுதியில் இருந்து மீட்கப்பட்டார். அவருடன் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அந்த நபர் சிறுமியை கடத்தி, கடந்த 10 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
கடத்தி சென்று அரங்கேற்றப்பட்ட கொடுமை
எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், 17 வயது சிறுமியை போல 6 க்கும் மேற்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. தற்போது எச்.ஐ.வி நோய்தொற்றுடன் உள்ள குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர், அவரினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுக்கும் நோய்தொற்று பரவியுள்ளதா? என்பதை மருத்துவ ரீதியாக அறிந்து, உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்துள்ளனர்.
குஜராத் சிறுமியை அந்த நபர் நாக்பூர், ஹைதராபாத், பிளசிப்பூர், சூரத், அவுரங்காபாத் உட்பட பல மாநிலங்களுக்கு அழைத்துச் சென்றும் வன்கொடுமை செய்துள்ளார். இறுதியாக அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள பிஜோரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு சரிவர உணவு கொடுக்காமல் துன்புறுத்தவும் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 8 வயது சிறுமி மாரடைப்பால் பள்ளி வளாகத்திலேயே மரணம்; கேமிராவில் பதிவான இறுதி காட்சிகள்.!