நீலம், மஞ்சள் நிறத்தில் இருக்கும் தவளையை பார்த்திருக்கீங்களா?.. வைரலாகும் வீடியோ.!



Indian Blue Frog and Yellow Frog Video Goes Viral

வங்காள விரிகுடா - இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஜாவத் புயலாக மாறி ஒடிசா - ஆந்திரா இடையே கரைய கடந்தது. பருவமழை காலங்களில் விலங்குகளின் பல விநோதங்கள் தெரியவரும். 

அந்த வகையில், ஜாவத் புயலின் தாக்கத்தால் புவனேஸ்வரில் மழை பெய்து வந்த நேரத்தில், ஆண் தவளைகள் தங்களின் நிறத்தை மாற்றி இருக்கிறது. இனப்பெருக்க காலத்தில் மூர் தவளைகள் பழுப்பு நிறத்தில் இறந்து நீல நிறமாக மாறும். 

தனது துணையை ஈர்ப்பதற்கும், தேடுவதற்கும் அது உதவி செய்கிறது. இந்திய காளை தவளைகள் இனப்பெருக்க காலங்களில் பிரகாசமான மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. இதன் குரல் பைகள் நீல நிறமாக மாறுகிறது. 

பிரவுன் மற்றும் ஆலிவ் பச்சை போன்ற கார்ச்சிகரமான வண்ணம், பெண் துணையின் கவனத்தை ஈர்க்க உதவி செய்கிறது. மழை காலங்களில் நடக்கும் இயற்கையின் அற்புதம் இது. 

இதுகுறித்த வீடியோ மற்றும் தகவலை இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த நந்தா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோக்கள் வைரலாகி வருகிறது.