மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லண்டன் நகரில் கொலை செய்யப்பட்ட இந்தியர்... கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் கைது.!
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கேரள மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவைச் சார்ந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலத்தைச் சார்ந்த அரவிந்த் சசிகுமார் மற்றும் சல்மான் சலீம் இவர்கள் இருவரும் தெற்கு லண்டனில் உள்ள வெட்கம் தெருவில் இருக்கும் ஒரு குடியிருப்பில் மேலும் இரண்டு நண்பர்களுடன் வசித்து வந்தனர். இவர்கள் இருவருமே மாணவர்களுக்கான விசாவில் இங்கிலாந்து சென்றவர்கள்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்த வாக்குவாதம் முற்றியே கைகலப்பான நிலையில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அரவிந்த் சசிகுமாரின் மார்பில் குத்தி இருக்கிறார் சல்மான் சலீம். இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் சசிகுமாரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அரவிந்த் சசிகுமார். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சல்மான் சலீம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டதால் தான் அரவிந்த் சசிகுமார் மரணம் அடைந்ததாக பிரேத பரிசோதனை முடிவும் வெளியாகி இருக்கிறது. லண்டன் நகரில் இந்தியர் ஒருவர் சக இந்தியராலையே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.