மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த இன்ஸ்டாகிராம் நண்பர்!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் தனக்கு மதுபானம் கொடுத்து பலத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பழகி வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலம் பழகி சிலர் காதலித்து திருமணம் செய்து வந்தாலும், ஒரு சிலர் இதனை பயன்படுத்தி கொலை, கற்பழிப்பு, பணத்தை ஏமாற்றுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹித்திக் ஷா என்ற 21 வயது இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரு நாள் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஹித்திக் ஷா மதுபானம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் நண்பரின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து மயக்கம் தெளிந்த பிறகு அந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் யாருடன் நண்பர்களாக பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், தனக்கு நேர்ந்தது போல இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்று அந்த இளம் பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.