மாதம் பெட்ரோல் மானியமாக ரூ.250..! மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு..!



Jharkhand Govt Announce Subsidy to Petrol Fuel Those below the poverty line

ஜார்கண்ட் மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுமென அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்து இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், "வறுமைக்கோட்டுக்குள் கீழ் உள்ளவர்கள், தங்களின் இருசக்கர வாகனத்திற்கு முதல்வர் ஆதரவு திட்டத்தின் கீழ் லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம், மாதம் 10 லிட்டருக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும். 

Jharkhand

மானிய தொகையானது நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மானிய உதவியை பெறுவதற்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்கள், அரசு வழங்கியுள்ள செயலி வழியே பதிவு செய்துகொள்ளலாம். 

தற்போது வரை அரசுக்கு 1.04 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இவற்றில் 73 ஆயிரம் விபத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிற விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.