#KarmaReturns: கள்ளக்காதலனுடன் ஜாலியாக வாழ ஆசை., கணவனை போதைப்பொருள் கேசில் சிக்கவைத்த மனைவி.. சம்பவம் செய்த கர்மா.!
உல்லாச வாழ்க்கை நடத்துவதற்காக, தாலிகட்டிய கணவனை மனைவி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த மனைவி இறுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியில் வசித்து வருபவர் சுனில் வர்கீஸ் (வயது 38). இவரின் மனைவி சௌமியா (வயது 33). சௌமியா வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலர் ஆவார். இதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் வினோத். சௌமியாவிற்கும் - வினோத்திற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
துபாயில் வினோத்துக்கு வேலை கிடைத்து சென்றுவிட்டாலும், அவ்வப்போது பணம் செலவு செய்து ஊருக்கு வந்து சௌமியாவை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். உல்லாச வாழ்க்கையில் ஒன்றிப்பிணைந்த கள்ளக்காதல் ஜோடிகள், மணபொருத்தம் ஏற்பட்டுள்ளதாக எண்ணி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த விஷயத்திற்கு சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என்ற காரணத்தால், அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
எப்படி திட்டமிட்டு கொலை செய்தாலும் காவல் துறையினரிடம் சிக்கி விடுவோம் என்பதை புரிந்துகொண்ட தம்பதி, சுனிலை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பிடலாம் என்று எண்ணியுள்ளனர். வினோத் தனது நண்பரான ஷாநவாஸ் என்பவருக்கு தொடர்பு கொண்டு கள்ளக்காதல், திருமண விபரத்தை தெரிவித்து, கணவனை சிக்க வைக்க போதைப்பொருள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு உதவ துடித்த ஷாநவாசும், தனக்கு தெரிந்த போதைப்பொருள் கும்பலிடம் இருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த போதைப்பொருளை வினோத் சௌமியாவுக்கு அனுப்பி வைக்க, சௌமியா தனது கணவருக்கு தெரியாமல் அவரின் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வினோத் தனது நண்பரின் மூலமாக சுனிலின் இருசக்கர வாகனத்தில் போதைப்பொருள் இருப்பதாக இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருப்பசாமியிடம் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்த வண்டன்மேடு காவல் துறையினருக்கு உத்தரவிடவே, அதிகாரிகள் சுனிலின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் சுனில் வர்கீஸ் நிரபராதி என்பது உறுதியானது. இதனால் அவரை விடுவித்த காவல் துறையினர் சௌமியா, ஷாநவாஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், சுனிலை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
#கர்மா