35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
இடுக்கி மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர், கிளீனர் பரிதாப பலி.!
கேரள மாநிலத்தில் உள்ள அடிமாலி நகரில் இருந்து கோதமங்கலத்திற்கு சரக்கு ஏற்றிய கனரக லாரி இடுக்கி மலைப்பாதை வழியாக பயணம் செய்துகொண்டு இருந்தது. லாரியை ஓட்டுநர் சிஜி என்பவர் இயக்கியுள்ளார்.
நேற்று இரவு லாரி இடுக்கி மலைப்பாதையில் சென்றுகொண்ட இருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக இயங்கியுள்ளது. தாறுமாறாக ஓடிய லாரி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
லாரியின் ஓட்டுநர் சிஜி மற்றும் கிளீனர் சந்தோஷ் ஆகியோர் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் லாரியை மீட்டு, ஓட்டுநர் மற்றும் கிளீனரின் உடலை வெளியே எடுத்தனர். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.