பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முன்விரோதத்தில் பயங்கரம்: 31 வயது இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை..!
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி, உடும்பஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் ஷீலா (வயது 31). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரரால் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவந்த ஷீலா - சசிகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஷீலா பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.