காதலர் தினத்தில், கணவனுக்கு கல்லீரல் தானம் செய்த மனைவி.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி செயல்.!



Kerala Kottayam Wife donate Lungs to Husband Feb 14 Operation Success

கணவருக்கு கல்லீரல் சார்ந்த பிரச்சனை ஏற்பட, மனைவியே கணவனுக்கு கல்லீரல் தானம் செய்த நெகிழ்ச்சி செயல் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயத்தில் வசித்து வருபவர் சுபீஷ். இவரின் மனைவி ப்ரவீஜா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிகளிடையே அன்பும், பாசமும் தழைத்தோங்க, சுபீஷ் குடும்பத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், சில வருடத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்கையில் சுபீஸுக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் ப்ரவீஜா என்ன செய்வதென்றி திகைக்க, அறுவை சிகிச்சைக்கு பணம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், மாற்று கல்லீரல் பொருத்தினால் மட்டுமே சுபீஷ் குணமடைவார் என்று கூறிவிட, அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை செய்யலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால், அதற்கு கல்லீரல் தானம் யார் செய்வார்கள்? என்ற கேள்வி எழும்ப, காதல் கணவருக்கு தனது கல்லீரலையே தானம் செய்யலாம் என ப்ரவீஜா முடிவெடுத்துள்ளார். 

KERALA

இதுகுறித்து மருத்துவர்களிடம் ப்ரவீஜா தெரிவிக்க, அவரின் கல்லீரல் சுபீஸுக்கு பொருத்தமாக இருக்குமா? என மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பச்சை சிக்னல் கிடைக்க, காதலர் தினத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ப்ரவீஜா விருப்பம் தெரிவித்துள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள், நேற்று கோட்டயம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

நேற்று காலையில் தொடங்கிய அறுவை சிகிச்சை சுமார் 18 மணிநேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. ப்ரவீஜாவின் கல்லீரல் அவரது கணவர் சுபீஸுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த செயல் பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.