#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
காதலியை லாட்ஜில் கொலை செய்து முகநூலில் வீடியோ போட்ட காதலன்.. இரத்தம் வழிய நடந்த பரபரப்பு சம்பவம்.. அதிர்ந்துபோன மக்கள்.!
சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அவர் துரோகம் செய்ததாக கூறி காதலன் கொலை செய்து துரோகம் செய்வோருக்கு இதுதான் கத்தி என வீடியோ வெளியிட்ட பயங்கரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் மேகலா ரிசார்ட் செயல்பட்டு வருகிறது. கடந்த நவ. 6ம் தேதி ஜோடி ஒன்று அறையெடுத்து தங்கியுள்ளது. அந்த ஜோடியில் இளைஞன் கடந்த 7ம் தேதி மாலை நேரத்திற்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றவர் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் இளைஞன் அபிஜித் படிதார் என்பதும், உயிரிழந்த பெண்மணி சிறுமியான ஷில்பா ஜாரியா என்பதும் அம்பலமானது. இவர்களில் சிறுமி தனது வயதை மறைத்து விடுதியில் தங்குவதற்காக தவறான வயது மற்றும் பெயர் உள்ள போலி அடையாள அட்டையை வழங்கியுள்ளார்.
அதாவது, இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், ஒன்றாக பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனர். அப்போது, காதலியான சிறுமி தனக்கு துரோகம் செய்கிறார் என அபிஜித் நினைத்துள்ளார். இதனையடுத்து, காதலியை போலியான அடையாள அட்டையோடு விடுதிக்கு அழைத்து வந்த அபிஜித் தனது திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்துள்ளார்.
அங்கு இருவரும் மதுபானம் அருந்திய நிலையில், முதல் நாள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் மதிய நேரத்தில் பெண்மணி அபிஜித் வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. மூன்றாவது நாள் வரை எதுவும் கண்டுகொள்ளாத விடுதி ஊழியர்கள், 3ம் நாளில் கதவை தட்டியும் திறக்காததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னரே கொலை சம்பவம் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது. இதில், காதலனால் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் உறுதியான நிலையில், கொலை சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், இளைஞன் சிறுமியின் தொண்டை, மணிக்கட்டு பகுதிகளில் கத்தியால் குத்தி இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க விட்டு கொலை செய்கிறான். மேலும், சிறுமி உயிருக்கு துடித்துக்கொண்டு இருக்கும்போதே, துரோகம் செய்பவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்.
இந்த விடியோவை பார்த்த அதிகாரிகள் காதல் விவகாரத்தில் கொலை செய்ததை உறுதி செய்ததை தொடர்ந்து, குற்றவாளி அபிஜித்க்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
जबलपुर में प्रेमिका की हत्या कर सनकी आशिक ने खूनी वीडियो किया वायरल
— Agniban (@DAgniban) November 11, 2022
प्रेमिका तड़पती रही और सनकी गुर्राता रहा...#JabalpurNews #viralvideo #MPPolice @DGP_MP #Whimsical #AgnibanNews #MekhlaResort #DeoriOfMP #CrimeNews pic.twitter.com/uLApYJ2zdk