மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் என குடும்பமே சித்ரவதை.. பெண்ணை உயிருடன் கொளுத்திய பயங்கரம்.!
திருமணம் முடிந்த 3 ஆவது நாளில் இருந்து பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த மணமகன் குடும்பத்தினர், பெண்ணின் உடலில் மண்ணெணெய் ஊற்றி கொளுத்திய பயங்கரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டம், சிஹோரா நயா முஹல்லா பகுதியை சேர்ந்த பெண்மணி அஞ்சலி சவுதாரி. இவரின் கணவர் நீரஜ் சோப்ரா. இவர்கள் இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போதே பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்ட நிலையில், அவை போதாது என்று கூறி திருமணமான 3 ஆவது நாளிலேயே நீரஜின் குடும்பத்தினர் அஞ்சலியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
மேலும், நீரஜ் சவுதாரியின் சகோதரர் தீரஜ், தாயார் சுபத்ரா பாய், அவரது தாயார் குஜராத்தி பாய் ஆகியோரும் அஞ்சலியை தொந்தரவு செய்து வந்துள்ளனர். வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்த நீரஜ், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.
கடந்த 3 மாதமாக நரக வேதனையை பெண்மணி அனுபவித்து வந்த நிலையில், நேற்று நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை ஒன்றாக சேர்ந்து வரதட்சணை கேட்டு அடித்துள்ளனர். இதுபோதாதென்று, நீரஜின் தாயார் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து, அஞ்சலியின் மேல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடலில் தீப்பற்றி எரிந்து அலறித்துடித்த பெண்மணியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே, அதிகாரிகள் நேரில் சென்று பெண்மணியிடம் வாக்குமூலத்தை பெற்றனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீரஜ், அவரின் தம்பி தீரஜ், தாய் சுபத்ரா பாய், பாட்டி குஜராத்தி பாய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.