#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
மனைவியை துள்ளத்துடிக்க அடித்தே கொன்ற கொடூர கணவர்; பெண் பாஜக நிர்வாகி கொலையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
குடும்ப பிரச்சனையில் மனைவியை கணவர் அடித்தே கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரை சேர்ந்தவர் சனா கான் (வயது 34). இவர் கிழக்கு மஹாராஷ்டிரா வட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஆவார். இவரின் கணவர் அமித் சகு (வயது 37). ஜபல்பூரில் உணவகம் நடத்தி வருகிறார்.
சனா தனது கணவரை பார்ப்பதற்கு ஆகஸ்ட் 1ம் தேதி நாக்பூரில் இருந்து ஜபல்பூர் சென்றுள்ளார். பின் அவர் வீட்டிற்கும் வரவில்லை, குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டும் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த சனாவின் தாய் மெஹ்ருனிஸா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சனா கான் தனியார் பேருந்தில் பயணித்து ஜபல்பூர் வந்ததும், பின் அங்கு சென்றதும் அம்மாவை தொடர்பு கொண்டவர் மாயமாகியதும் தெரியவந்தது. அவரின் செல்போன் எண் மூலமாக இறுதியாக அவர் ஜபல்பூர் வீட்டில் இருந்ததை உறுதி செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அதிகாரிகள் முதற்கட்ட சோதனை நடத்தியும் முன்னேற்றம் இல்லை. நேற்று முன்தினம் சனாவின் கணவர் அமித்திடம் விசாரணை நடந்தது. விசாரணையில், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவரை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "தம்பதிகளிடையே பணம் மற்றும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது வாக்குவாதமும் நடந்துள்ளது. இறுதியாக நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த அமித், குச்சியை கொண்டு சனாவை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
வலி தாங்க இயலாது துடித்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். பின் கொலையை மறைக்க பெல்கெடா பகுதியில் இருக்கும் ஹிரான் நதியில் உடலை வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த கொலைக்கு 2 நபர்கள் உடந்தையாகவும் இருந்துள்ளனர். இதனையடுத்த, மூவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.