மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
களைகட்டும் ராமர் கோவில் திறப்பு விழா; உற்சாகமாக ஆசிரியையுடன் நடனமாடிய மாணவ-மாணவியர்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமர் கோவில், ஜனவரி 22 அன்று திறக்கப்படுகிறது. கும்பாவிஷேக பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துகொள்கிறார்.
அதேபோல, தேசிய அளவில் பல மாநிலங்களை சேர்ந்த அரசியல்கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் நேரில் வர பிரத்தியேகமாக ராமர் கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக உத்திரபிரதேசம் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பல மாநிலங்களில் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில், பள்ளி மாணவர்கள் ஸ்ரீ ராமர் பஜனையில் கலந்துகொண்டு ஒருசேர நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த காணொளி வைரலாகி வருகிறது.
#WATCH | Nagpur, Maharashtra: School students dance on Shri Ram bhajans ahead of the Shri Ram Janmabhoomi Temple Pran Pratishtha ceremony. pic.twitter.com/nMmAX718fl
— ANI (@ANI) January 20, 2024