மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேஸ் கசிந்து புதுமணத்தம்பதி மூச்சுத்திணறி பலி.. வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி என்ன?..! மக்களே கவனம்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காட்கோபர் குக்ரேஜா டவர் பகுதியில் வசித்து வருபவர் தீபக் ஷா (வயது 40). இவர் தனது 35 வயது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களின் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் அழைத்து பார்த்துள்ளனர். செல்போனில் தொடர்பு கொண்டும் பலன் இல்லாததால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில் அவர்கள் வந்து கதவை திறந்து பார்க்கையில், இரண்டு பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச்சென்றபோது இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக பந்த்நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் வீட்டில் கேஸ்கசிவு தொடர்பான துர்நாற்றம் இருந்ததாகவும், பலியான தம்பதிகளின் உடலில் காயங்கள் இல்லை என்பதால் கேஸ்கசிவு காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தீபக் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை தொழில் முனைவராக இருந்த நிலையில், தற்போது வேலையில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.