திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
22 வயது கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த கொடூரம்.. வீடியோ எடுத்த நண்பன்.. அதிரவைக்கும் சம்பவம்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர், டகோகா பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவு 12:30 மணியளவில், கல்லூரியில் பயின்று வரும் 22 வயது மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்ததாக தெரியவருகிறது.. இவர்கள் நால்வராக பயணித்துள்ளனர்.
அச்சமயம் இருசக்கர வாகனத்தில், பாதுகாவலர் போல உடையணிந்து வந்த மர்ம நபர் மற்றும் அவருடன் இருந்த 2 பேர், பெண்ணிடம் விசாரித்துள்ளார். பின் பெண்ணை அவர் தங்கியுள்ள விடுதியில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 37 வயது பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 60 வயது கிழவன்; பலாத்காரம் நிறைவேறாததால் கொடூரம்.!
பாலியல் பலாத்காரம்
இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்துச்சென்ற நபர், அங்குள்ள இரயில் நிலையத்தின் மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவருடன் வந்த மற்றொருவர் வீடியோ எடுத்து வைத்து, பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
தாங்கள் மீண்டும் அழைக்கும்போது நீ வரவேண்டும், இல்லையேல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தனக்கு நடந்ததை வெளியே கூற இயலாமல் தவித்துப்போன பெண்ணுக்கு, சம்பவத்தன்று கும்பல் தொடர்பு கொண்டு தாங்கள் அழைக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளது.
காவல் நிலையத்தில் புகார்
கயவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்ட மாணவி தயக்க காண்பிக்கவே, அவர் பலாத்காரம் செய்யப்பட்ட காணொளியில் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனையடுத்து, மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து துரித விசாரணையை முன்னெடுத்து, இக்குற்றத்தில் ஈடுபட்ட அமஞ்சோத் சிங் (வயது 22), மாஞ்சித் சிங் (வயது 25), ரன்வீர் சிங் (வயது 19) ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள லதேவாளி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்
பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட அமஞ்சோத், தனது நண்பர்கள் மஞ்சித் மற்றும் ரன்வீர் ஆகியோருடன் சேர்ந்து பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்தது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு புகார் பெறப்பட்ட சிலமணிநேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளை சீரழிப்பது எப்படி? - பெண் யூடியூபரின் அதிர்ச்சி பேச்சு.. அதிரடி கைது.!