#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கடந்த ஓராண்டாக நடந்த சோகம்.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண், 3 காவலர்களால் கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்மணி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த ஓராண்டாக காவலர்கள் கூட்டாக சேர்ந்து சீரழித்து இருக்கின்றனர்.
இதுதொடர்பாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து 376 D கூட்டுப்பாலியல் பலாத்காரம் மற்றும் போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ரஜனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 காவலர்களில் ஒருவர் ராஜ்கர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பாலியல் பலாத்காரம் தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி தற்போது அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.