மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
சமீப காலமாக நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தெரு நாய்கள் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் 3 வயது சிறுமியை தெரு நாய்கள் சூழ்ந்து கடித்து குதறிய சம்பவம் பார்ப்போரை பதப்பதைக்க வைத்துள்ளது.
Horror Unfolds in Ghaziabad Highrise as #StrayDogs Attack, Drag Toddler in Raj Nagar Extension. pic.twitter.com/58g9gf4dGx
— Punekar News (@punekarnews) January 29, 2024
அந்த வீடியோவில் தெரு நாய்கள் துரத்தியதால் மூன்று வயது சிறுமி, நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். அப்போது அந்த சிறுமி நிலை தடுமாறி தரையில் கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த தெருநாய்கள் சூழ்ந்து சிறுமியை தாக்கி இழுத்து செல்லும் காட்சியை மனதை ரணமாக்கியது.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் ஓடி வந்து தெரு நாய்களை விரட்டி விட்டு சிறுமியை காப்பாற்றினார். இதனையடுத்து சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.