"எங்க லவ்வை பிரிக்கிறியா.?" காதலியின் தாயை கீழே தள்ளி அலறி அடிக்க அரங்கேறிய கொடூரம்.!



telungana young man trying to kill his girlfriends mother

காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காதலியின் தாயை கழுத்தை நெறித்து ஒரு இளைஞர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்ற இளைஞர் சுஷ்மிதா என்ற பெண்ணுடன் நட்பாக பழகி வந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் தாய்க்கு தெரிய வந்தது.

telungana

உடனடியாக சுஷ்மிதாவை அவர் கண்டித்து இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தாயின் மிரட்டலுக்கு பயந்து சுஷ்மிதாவும் ராஜ்குமாரின் காதலை கைவிட துணிந்துள்ளார். சுஷ்மிதாவின் இந்த முடிவு ராஜ்குமாருக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. எனவே, சுஷ்மிதா வீட்டிற்கு சென்ற அவர் தாயின் கழுத்தை நெறித்து கொடூரமாக கொல்ல முயற்சித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மகள் திருமணத்தில் தந்தைக்கு நேர்ந்த சம்பவத்தால், துடிதுடித்து உயிரிழப்பு.!

அப்போது சுஷ்மிதாவின் தாய் அலறி அடிக்க அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து காப்பாற்றி இருக்கின்றனர். ராஜ்குமாரை பிடித்து அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையாகி இருக்கிறது. போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப்பதிந்ததுடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்துக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ.. பிறந்தநாளை கொண்டாட காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!