சனீஸ்வர பகவானுக்கே விபூதி அடித்த பூசாரி.. திருநள்ளாறு கோவில் பெயரில் அதிர்ச்சி செயல்..! 



Thirunallar Sani Temple Fake Website Scam 

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன்பு இணையதளத்தை உருவாக்கி இருந்தது.

இந்த இணையத்தளத்தில் பூஜை, தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை போன்ற தகவல்கள் பதிவிடப்பட்டு இருந்துள்ளன. மேலும், கோவிலுக்கு வர இயலாத பக்தர்கள் கோரிக்கைக்கேற்ப பணம் வசூலிக்கப்பட்டு பிரசாதமும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, கோவில் இணையத்தில் பணம் செலுத்தியும் பிரசாதம் வரவில்லை என கோவில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது. 

இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரியில் பேரதிர்ச்சி.. ரௌடிகள் மூவர் வெட்டிப்படுகொலை..!

Pondicherry

இருவர் கைது

புகாரின் பேரில் காரைக்கால் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், போலி இணையத்தளம் ஒன்றை நடத்தி பணம் மோசடி நடப்பது உறுதியானது. இதுதொடர்பாக கோவில் மேலாளர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கோவில் அர்ச்சகர் வெங்கடேஸ்வரா குருக்கள் கைது செய்யப்பட்டார். 

இவரும், பெங்களூரை சேர்ந்த ஜனனி பரத்தும் போலியான இணையத்தை உருவாக்கி பக்தர்களிடம் மோசடி செயலில் ஈடுபட்டது அம்பலமானது. விசாரணையைத் தொடர்ந்து ஜனனி பரத், வெங்கடேஸ்வர ஐயர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

இதையும் படிங்க: ஆன்லைன் லோன் மோசடி; ஆபாசமாக சித்தரித்து ரூ.300 கோடி பணம் பறிப்பு.!