விபரீத சடங்கு.. உ.பி-யில் மாப்பிள்ளையை வச்சு செய்த மணமகள் தரப்பு.! அதிர்ச்சி காரணம்.! 



uttar pradesh groom get insulted by brides family in marriage function

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது விபரீத சடங்கினால் மணமகள் மற்றும் மணமகன் வீட்டினர் இருவருக்கும் அடிதடி களேபரம் வரும் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பொதுவாக வட மாநிலங்களில் நடக்கக்கூடிய திருமணங்களில் வித்தியாசமான சடங்குகளை கடைபிடிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் அணியும் காலனியை மணமகள் வீட்டினர் மறைத்து வைத்து விடுவார்கள்.

Uttar pradesh

அதை மணமகன் திருப்பி கேட்கும் போது மணமகள் வீட்டினர் கேட்கக்கூடிய அளவிற்கான பணத்தை அவர் கொடுக்க வேண்டும். இந்த சடங்கின் போது பிஜ்னோர் பகுதியில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் 50 ஆயிரம் ரூபாய்க்கு பதில் வெறும் 5000 ரூபாயை கொடுத்துள்ளார். இதனால் மணமகள் வீட்டினர் அவரைப் பார்த்து பிச்சைக்காரன் என்று கேலி செய்துள்ளனர். 

இதையும் படிங்க: மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்; புதிய மாமியார் வைத்த ட்விஸ்ட்டால் ஷாக்.!

அத்துடன் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி ஆகியுள்ளது. திருமண வீடு கலவரமான நிலையில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேசி சண்டையை நிறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திருமணமான 15 நாட்களில் கணவர் கொடூர கொலை; கள்ளக்காதல் உறவுக்கு ஆசைப்பட்டு 22 வயது மனைவி அதிர்ச்சி செயல்.!