மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலினத்தை உறுதிப்படுத்த திருநங்கைகளை நிர்வாணமாக்கிய காவலர்கள்.!
திரிபுரா மாநிலத்தில், கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் 4 திருநங்கைகள் உணவகத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். இவர்கள் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டிய காவல் துறையினர், நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, ஆண் - பெண் காவலர்கள் முன்னிலையில் பாலினத்தை நிரூபணம் செய்ய ஆடையை கழற்றக்கூறி வற்புறுத்தி இருக்கின்றனர்.
4 திருநங்கைகளும் வேறு வழியின்றி தர்ம சங்கடத்தோடு ஆடையை கழற்றிய நிலையில், விரக்தியடைந்த ஒரு திருநங்கை விஷயம் தொடர்பாக வேறொரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் திரிபுராவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் திரிபுரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.