#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரோஜாவை வச்சி?.. உக்ரைனில் இருந்து பத்திரமாக வந்த மாணவர் காட்டம்.. பரபரப்பு பேட்டி..!
உக்ரைன் - ரஷியா போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் பிற நாடுகளின் உதவியுடன் விமானம் மூலமாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்கள் தலைமையிலான குழுவும் உக்ரைன் எல்லையில் உள்ள நாடுகளில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வெளியேறுகின்றனர். தற்போது வரை உக்ரைனில் இருந்து 6,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ளோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து போலந்து நாட்டின் எல்லைக்கு சென்று, அங்கிருந்து டெல்லி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவர், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
இதுதொடர்பான பேட்டியில், "மக்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், இங்கு வந்ததும் பூங்கொத்து கொடுப்பது ஏன்?. இது அர்த்தமற்ற செயல். எல்லைதாண்டி ஹங்கேரிக்கு வந்ததும் தான் இந்திய தூதரகம் உதவி செய்கிறது. உக்ரைனில் இருக்கும் போது எந்த உதவியும் கிடைக்கவில்லை. சொந்த முயற்சியில் எல்லைக்கு வருகிறோம். இரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எங்களுடன் இருந்த உள்ளூர் மக்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். போலந்து எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மை தான். அந்த சம்பவத்திற்கு நமது அரசே பொறுப்பு ஆகும். சரியான நேரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புங்கள் என போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்டது. அதனை ஏற்று சிலர் மட்டுமே இந்தியா வந்தார்கள். எஞ்சியுள்ளோர் எதுவும் நடக்காது என்ற தைரியத்தில் அல்லது சூழலால் அங்கேயே தங்கிவிட்டார்கள். போர் தொடங்கியதும் அனைவருக்கும் பதைபதைப்பு அதிகமாகி, தங்களை காப்பாற்றக்கூறி கோரிக்கை வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், போர் நடைபெறும் இடங்களுக்கு எந்தநாட்டு தூதரக அதிகாரிகளும் செல்ல அனுமதி இல்லை. அங்கு சிக்கியுள்ளவர்கள் எல்லைக்கு சுயமாக வந்தால் மட்டுமே, தாயகம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் எதிர்பாராத உயிரிழப்பு நிகழ்ந்தால், சிறப்பு அனுமதி பெற்றுத்தான் உள்ளே செல்ல இயலும். அனுமதியின்றி சென்றால் தாக்குதலில் அவர்களும் பலியாக வாய்ப்புகள் உள்ளன. முன்னதாகவே உக்ரைனில் இருந்த அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாணவர்கள், முதலியேயே அரசின் அறிவுறுத்தல்படி எல்லைக்கு வந்துவிட்டனர். பிறரை அலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ஒருங்கிணைக்கிறார்கள்.