மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்கா சாப்பிட்டு வீடெல்லாம் காரி உமிழ்ந்த மனைவி; கணவர் பரபரப்பு புகார்.!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா, ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்த கணவர் தனது மனைவிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது மனைவி குட்கா சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளார்.
இதனால் அவர் குட்காவை சாப்பிட்டு வீடு முழுவதும் பல்வேறு இடங்களில் எச்சிலை துப்பி வைக்கிறார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணுக்கு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும் அவர் குட்கா உபயோகிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக தெரியவில்லை. இதனால் தனது மனைவியின் குடும்பத்தாரிடம் சொல்லி அவரை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாக கணவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று மனைவி தற்போது குற்றச்சாட்டை முன்வைத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.