மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் காதலி, அவரின் கணவரை வெளுத்துவிட்ட இளைஞர்: காதலை கைவிட இயலாமல் நடந்த சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும் கணவர், பெண்ணின் முன்னாள் கள்ளக்காதலரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உள்ள கோமதி நகர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக தம்பதிகள் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பயாஸ் கான் என்பவருக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் திருமணத்திற்கு முன்பு பயாஸை காதலித்து இருக்கிறார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
பிரிவில் மனமில்லாத பயாஸ் தொடர்ந்து பெண்ணை தன்னை காதலிக்கக்கூறி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பெண்ணோ வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள இயலாத பயாஸ், தனது முன்னாள் காதலி மற்றும் அவரின் கணவரை தாக்கி இருக்கிறார். தற்போது அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.