வைரலான "பஞ்சாயத்து" போட்டோவை மீண்டும் வைரலாக்கிய போலீசார்..!! குவியும் லைக்குகள்..!!



virat gambir clash photos viral agai from uttar pradesh police twitter page

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 46 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த 1 ஆம் தேதி நடந்த 43 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

குறைந்த ரன்களே எடுக்கப்பட்ட இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு நடுவே சில மோதல்களின் காரணமாக, விராட் கோலிக்கும், லக்னோ அணியின் இயக்குனர் கவுதம் கம்பீர் ஆகியோரிடையே வாக்குவாதம் எழுந்தது. லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் சாமாதானப்படுத்தியும் வாக்குவாதம் முற்றியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில், அந்த புகைப்படத்தை உத்தரபிரதேச காவல்துறையினர் தங்களது புதிய சேவை எண்ணுக்கான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். வாக்குவாதங்களை தவிருங்கள் எந்த அவசர உதவிக்கும் 112 எண்ணை அழுத்துங்கள்  என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

அந்த பதிவை இதுவரை  2.1 மில்லியன் பேர் பார்த்துள்ளதுடன்,  7238 ரீ-ட்வீட் மற்றும் 53.6 ஆயிரம்  பேர் 'லைக்' செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.