திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்... மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்!! மனைவி செய்த பரபரப்பு சம்பவம்...
ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டம் கந்தசர் கிராமத்தை சேர்ந்தவர் பரமானந்த முதுலி - சுகந்தி தம்பதியினர். 45 வயதான முதுலிக்கும் சுகந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வெகு நாட்களாகவே சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென முதுலிக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுகந்தி ஆத்திரத்தில் கணவனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.