மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாயால் வந்த வேதனை.. மனைவியைக் கொன்றதாக கணவர் போலீசில் ஆஜர்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் பரேஷ் ஜோஷி. இவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமிதா உடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் வந்த கார் கொரோகே - கேத்பிரம்மா என்ற நெடுஞ்சாலையில் டான் மஹுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது காரை ஒட்டி வந்த பரேஷ் ஜோஷி, நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதி கொடூர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது மனைவி அமிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால், மனமுடைந்த ஜோஷி தன் மனைவி இருந்ததற்கு தன்னுடைய கவன குறைவுதான் காரணம் என்று நினைத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தன் மீது வழக்கு பதிவு செய்யும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.