96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சளி தொல்லை, ஆஸ்துமா குணமடைய இந்த நெஞ்செலும்பு சூப்பை வாரத்திற்கு ஒருமுறை குடித்து பாருங்க.!?
ஊட்டச்சத்து நிறைந்த நெஞ்செலும்பு சூப்
பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சளித்தொல்லை, நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா போன்ற பல வகையான மூச்சுக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களும் குணமடைய வாரத்திற்கு ஒருமுறை இந்த நெஞ்செலும்பு சூப்பை ட்ரை பண்ணி பாருங்க
நெஞ்செலும்பு
சூப் செய்ய தேவையான பொருட்கள்
ஆட்டு நெஞ்சு எலும்பு - 250 கிராம், சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, தனியா - 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி, இடித்த பூண்டு - 6 பற்கள், இடித்த சின்ன வெங்காயம் - 1 கப், எண்ணெய் - 1 தேக்கரண்டி, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 5, சோம்பு - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை - 1, தக்காளி - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தண்ணீர் - 3 கப்
இதையும் படிங்க: ஒரு கப் கோதுமை மாவில் ஹெல்தியான இடியாப்பம்.! இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!?
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், தனியா மூன்றையும் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு பிரியாணி இலை மற்றும் நெஞ்செலும்பு கறி போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதக்கியதும் இடித்து வைத்த பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி அரைத்து வைத்த மசாலா, உப்பு, சிறிது வர மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை சேர்த்து 10 விசில் வரும் வரை நன்றாக வேக விடவும். விசில் வந்ததும் குக்கரின் மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஊட்டச்சத்து நிறைந்த நெஞ்செலும்பு சூப் தயார்.
இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.! ஏன் தெரியுமா.!?