மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?
ஊட்டச்சத்தான உணவுகள்
பொதுவாக வீட்டில் சமைக்கும் உணவுகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக பீர்க்கங்காய் நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்துக்கள் தலை முதல் கால் வரை உள்ள நோய்களை குணப்படுத்தி ஊட்டச்சத்தை அளிக்கிறது. பீர்க்கங்காயில் என்னென்ன நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை குறித்து பார்க்கலாம்?
பீர்க்கங்காயில் உள்ள மருத்துவ குணங்கள்
தண்ணீர் சத்து நிறைந்த பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் வறட்சி, சூடு சம்பந்தப்பட்ட நோய்கள், போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை சீராக்குகிறது. பீர்க்கங்காயில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிரம்பி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.
இதையும் படிங்க: ரோட்டோரத்தில் வளரும் மூக்குத்தி பூச்செடியில் இவ்வளவு மருத்துவ குணங்கள்.!?
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பீர்க்கங்காய் இருந்து வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரக்க உதவி புரிகிறது. இதில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை தெளிவு பெற உதவி புரிகிறது. நீர் சத்து அதிகம் உள்ள பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
மேலும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பீர்க்கங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து எளிதாக உடல் எடையை குறைய வைக்கிறது. இதில் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து நிரம்பி இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அனீமியா நோயை குணப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய பீர்க்கங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கிறது.
இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.? மருத்துவர்கள் எச்சரிக்கை.!?