மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோட்டோரத்தில் வளரும் மூக்குத்தி பூச்செடியில் இவ்வளவு மருத்துவ குணங்கள்.!?
மூக்குத்தி பூ செடியின் நன்மைகள்
பொதுவாக நம் தமிழ்நாட்டில் வளரும் பலவகையான செடிகளில் மூலிகை குணம் நிறைந்துள்ளது என்பதாலேயே சித்தர்கள் பலவகையான நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை எளிதாக கண்டுபிடித்தனர். அந்த வகையில் ரோட்டோரத்தில் வளரும் மூக்குத்தி பூச்செடி என்று அழைக்கப்படும் தாத்தா தலை வெட்டி பூ செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
1. இந்த மூக்குத்தி பூ மஞ்சள், நீலம், வெள்ளை போன்ற மூன்று நிறங்களில் பூக்கிறது. ஆனால் இந்த காயில் விஷத்தன்மை அதிகமாக உள்ளது என்பதால் இதை மறந்தும் கூட எடுத்து சாப்பிடக்கூடாது.
இதையும் படிங்க: "கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது" முன்னோர்கள் கூறியதன் காரணம் என்ன தெரியுமா.!?
2. மூக்குத்தி பூ செடியின் இலைகளை பறித்து நன்றாக கழுவி ரசம் வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள சளிகள் எளிதாக வெளியேறிவிடும்.
3. மேலும் தலைபாரம் ஒற்றை தலைவலி மூக்கில் இருந்து நீர் வடிதல், தலையில் நீர் கோர்த்தல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
4. நம் உடலில் ரத்த காயம் ஏற்பட்டாலோ, அல்லது கீழே விழுந்து அடிபட்டாலோ அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது உடனடியாக இந்த மூக்குத்தி பூச்செடியின் இலைகளை கசக்கி காயத்தின் மேல் சாறு தேய்த்து வந்தால் உடனடியாக ரத்தம் நிற்கும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் புண்கள் ஏற்பட்டால் உடனடியாக ஆறாது அப்படிப்பட்டவர்கள் இந்த மூக்குத்தி பூச்செடியின் இலைகளை அரைத்து தேய்த்து வந்தால் புண்கள் உடனடியாக காய்ந்து விடும்.
6. தோலில் ஏற்படும் தேமல், சொறி, சிரங்கு, படை போன்றவற்றையும் எளிதாக குணப்படுத்துவதில் அருமருந்தாக இருந்து வருகிறது.
7. வயதானவர்களுக்கு மூட்டு வலி தொல்லை அதிகமாக இருக்கும் போது இந்த மூக்குத்தி பூ செடியின் இலைகள், வேர், பூ போன்றவற்றை எடுத்து ஒரு கடாயில் நன்றாக வதக்கி நல்லெண்ணெய் சேர்த்து வெள்ளை துணியில் போட்டு மூட்டு பகுதியை சுற்றி கட்டிக் கொண்டால் மூட்டு வலி உடனடியாக குணமடையும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய இந்த மூக்குத்தி பூச்செடியை ரோட்டோரத்தில் பார்த்தால் உபயோகப்படுத்தி மருத்துவ பலன்களை பெறலாம்.
இதையும் படிங்க: தினமும் நடைப்பயிற்சி செய்யும் நபரா நீங்கள்.? இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீங்க.!?