ஆயுளை அதிகரிக்கும் அற்புத உப்பு.! இமயமலையில் மட்டுமே கிடைக்கும் இந்த உப்பை பயன்படுத்தி பாருங்க.!?



Benefits of using these salts

ஆயுளை அதிகரிக்கும் உப்பு

"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழிக்கு ஏற்ப உப்பு சுவை இல்லை என்றால் அதை உட்கொள்வது மிகவும் கடினம். அந்த அளவிற்கு நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பின் சுவை முக்கியமானதாக இருந்து வருகிறது. ஆனால் உப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றது.

Salt

அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்

குறிப்பாக தைராய்டு, ரத்த கொதிப்பு, மயக்கம், நீரிழிவு பிரச்சனை போன்ற பல பாதிப்புகளும் உப்பை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே பல ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்து உப்பை உணவில் பயன்படுத்தி ஊட்டச்சத்துகளை பெறலாம். இந்த இந்துப்பில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

இதையும் படிங்க: இந்த ஒரு கசாயம் போதும்.! ஆயுசுக்கும் இந்த நோய்கள் வராது.!?

இந்துப்பில் உள்ள நன்மைகள்

சாதாரண உப்பு கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால் இந்த இந்துப்பு இமயமலையில் உள்ள பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதால் இதில் கால்சியம், இரும்புச்சத்து, அயோடின், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதால் சாதாரண உப்பை விட இந்த இந்துப்பை பயன்படுத்துவதால் பல நோய்கள் குணமாகின்றது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Salt

உடலில் சூடு அதிகமாக இருப்பவர்கள் இந்துப்பை உணவாக பயன்படுத்தி வரலாம். மேலும் பசியின்மை, எடை குறைவு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்துப்பு பயன்படுத்தி உணவு உட்கொள்வதால் இப்பிரச்சனை விரைவாக குணமாகும். வாய் துர்நாற்றம், பல் சொத்தை, ஈறுகள் வீக்கம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்துப்பை சுடு நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் நல்லது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் குளிக்கும் தண்ணீரில் இந்துப்பு கலந்து குளித்து வரலாம். இது போக இதய நோய், உடல் எடை அதிகரிப்பு, இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கும் அருமருந்தாக இந்துப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செய்து கொடுத்து பாருங்க.!?