மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த ஒரு கசாயம் போதும்.! ஆயுசுக்கும் இந்த நோய்கள் வராது.!?
ஊட்டச்சத்தான உணவுகளும் வாழ்க்கை முறையும்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணுகின்றனர். இதை அடிக்கடி உண்பதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல வகையான நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தினால் இளம் வயதிலேயே பலருக்கும் நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு நோய் வாய்ப்படும் போது எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரைகள் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால் நோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு விட்டால் ஒரு சில வீட்டு வைத்திய முறையை பயன்படுத்தி மருந்துகள் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட நோய்கள் எளிதில் குணமடைவதோடு, ஆயுசுக்கும் திரும்பி வராது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த வீட்டு வைத்திய முறையை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: நுரையீரலில் உள்ள நச்சுக்கள் ஒரே நாளில் வெளியேற இதை சாப்பிட்டு பாருங்க.!?
நோ
ய்களை குணப்படுத்தும் வீட்டு வைத்திய கசாயம்
தேவையான
பொருட்கள்
சீரகம் - ஒரு ஸ்பூன்,
கொத்தமல்லி விதைகள் - ஒரு ஸ்பூன்,
சோம்பு - ஒரு ஸ்பூன்,
மிளகு - ஒரு ஸ்பூன்,
பட்டை, கிராம்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சீரகம், கொத்தமல்லி விதைகள், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு என அனைத்தையும் தண்ணீர் ஊற்றி இரவு ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து 18 நாட்கள் குடித்து வர வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி, சளி தொல்லை, இருமல், தலைவலி, உடல் சோர்வு வயிற்றுக் கோளாறு, செரிமான பிரச்சனை, கல்லீரல் வீக்கம் போன்ற நோய்கள் குணமாவதோடு உடலில் பல வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது.
இதையும் படிங்க: காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செய்து கொடுத்து பாருங்க.!?