"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செய்து கொடுத்து பாருங்க.!?
ஊட்டச்சத்தாக குழந்தைகளுக்கு என்ன சமைக்கலாம்
காலையில் எழுந்தவுடன் பள்ளி குழந்தைகளுக்கு என்ன சமைக்கலாம் என்பது குறித்து தாய்மார்களுக்கு குழப்பமாகவே இருக்கும். தினமும் தோசை, இட்லி என்று சாப்பிடுவது பல குழந்தைகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். இவ்வாறு ஒரே மாதிரி உணவை சாப்பிடுவதற்கும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள் என்பதால் ராகி மாவில் ஊட்டச்சத்தான இந்த டிபனை செய்து கொடுத்து பாருங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க
ராகி ரொட்டி தேவையான
பொருட்கள்
ராகி மாவு, முருங்கை கீரை, வெங்காயம், உப்பு, வெல்லம், நெய், தனி மிளகாய் தூள், எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கி பின்பும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். முருங்கைக்கீரை பாதி வெந்து வரும் நிலையில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் வதக்கி வைத்த முருங்கைக் கீரை மற்றும் மிளகாய் தூள், சிறிது இடித்த வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பிசைந்து வைத்த மாவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கையில் தட்டி தோசை கல்லில் போட்டு நெய் ஊற்றி ரொட்டி போல் சுட்டு எடுத்தால் சுவையான ராகி மாவு ரொட்டி தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சட்னி செய்ய தேவையில்லை.
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?
இதையும் படிங்க: அசத்தலான சுவையில் பெருமாள் கோவில் புளியோதரை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!