"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
சின்ன வெங்காயம், எலுமிச்சை ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கணுமா?.. ஈஸியான டிப்ஸ் இதோ..!!
தினமும் நமது வாழ்க்கையில் சமையல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதில் உள்ள சில எளிய குறிப்புக்கள் குறித்து இன்று காணலாம். பத்து யோசனைகள் நமது சமையலறைக்கு கட்டாயம் உபயோகமாக இருக்கும்.
★தயிர், மோர் போன்ற பாத்திரங்களை சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அதில் இருக்கும் பால் வாடை நீங்கும்.
★மழைநீரில் பருப்பை வேகவைத்தால் விரைவில் வெந்துவிடும். உணவின் ருசியும் அதிகமாக இருக்கும்.
★ஊறுகாயை கிளற மரக்கரண்டி உபயோகம் செய்தால் அது விரைவில் கேட்டு போகாது.
★கருவேப்பிலை காயாமல் இருக்க அதனை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடிவைக்க வேண்டும்.
★பிளாஸ்டிக்கில் துர்நாற்றம் விலகுவதற்கு வினிகர் சேர்த்து கழுவலாம்.
★சின்ன வெங்காயம் வாங்கி வந்ததும் வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்து வைக்க, அது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
★எலுமிச்சையை தினமும் ஒரு மணிநேரம் நீரில் ஊறவைத்தால் ஒரு மாதம் வரையிலும் கெட்டுப்போகாமல் வாடாமல் இருக்கும்.
★வாழைக்காயை நீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.
★இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைத்தால் அப்படியே இருக்கும்.
★வெண்டைக்காயில் அதன் காம்பையும், தலைப்பகுதியையும் நறுக்கி வைக்க மறுநாள் வரை சமைப்பதற்கு முற்றாமல் இருக்கும்.