அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
இதய பிரச்சனையை சரி செய்யும் கறிவேப்பில்லை புதினா சாறு..!
கருவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
மேலும், கருவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கும் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அத்துடன் புதினா சளி மற்றும் தொண்டை வலியை அகற்றுவதற்காகவும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை - 1கைப்பிடி
நாட்டு சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
செய்முறை :
★முதலில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் கருவேப்பிலை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
★பின் அரைத்த தண்ணீர் போக மீதம் உள்ள தண்ணீரை வடிகட்டி எழுமிச்சை சாறுடன் சேர்க்கவும். அடுத்து நாம் அரைத்து வைத்த ஜூஸ் மற்றும் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
★மேலும், ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறினால் ஜில்லென்று வெயிலுக்கு இதமாக இருக்கும்.
இத்தகைய சுவையான கறிவேப்பிலை புதினா ஜூஸ் குடிப்பதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைவதுடன், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும்.