மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரைப்பறிக்கும் கருப்பு பூஞ்சை நோய்!! வெங்காயத்தில் இருந்தும் இந்த கருப்பு பூஞ்சை பரவுகிறதா? நிபுணர்கள் விளக்கம்..
வெங்காயத்தில் இருக்கும் கருப்பு பூஞ்சையினால் மனதிதர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா அளவுக்கு மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த பூஞ்சை நோய். கருப்பு, வெள்ளை, மஞ்சள் என பல பல பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கிவருகிறது. குறிப்பாக இந்த கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீண்ட நாள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த கருப்பு பூஞ்சை நோய் அதிகம் தாக்குகிறது.
இந்நிலையில் வெங்காயத்தில் இருக்கும் கருப்பு பூஞ்சையும் மனிதர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வர முக்கிய காரணம் என சகோகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
வெங்காயத்தின் மேல் இருக்கும் கருப்பு பூஞ்சை, பூமிக்கு அடியில் காணப்படும் பூஞ்சை தான். இதுவும் ஒரு சாதாரண பூஞ்சை தான். அஸ்பெர்கிலஸ் நைகர் எனப்படும் இந்த பூஞ்சையை தற்போது ஏற்படும் பூஞ்சை தொற்றுடன் தொடர்புபடுத்தி மக்கள் பீதியடையவேண்டாம். இதனால் எந்த பாதிப்புகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.