மழைக்காலத்தில் தொண்டைக்கு இதமாக துளசி ரசம்.! எப்படி செய்யலாம்.!?



Recipe and benefits of basil leaves

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம்?

மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பலருக்கும் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் இருக்கின்றது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் அவ்வளவு எளிதில் சரியாகாது. இதற்கு ஆங்கில மருத்துவப்படி பல மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Basil leaves

சளி காய்ச்சல் இருமலை குணப்படுத்தும் துளசி ரசம்

எனவே பலரும் மருத்துவரை சந்திக்க தயங்குகின்றனர். இவ்வாறு காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளான சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை சரி செய்யும் அருமருந்து தான் துளசி. துளசி இலையில் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் நன்மைகள் இருந்து வந்தாலும் இதனை பெரும்பாலும் பலரும் பயன்படுத்துவதில்லை. இந்த துளசியை வீட்டிலேயே ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் நோய் பாதிப்புகள் உடனடியாக குணமடையும். இந்த துளசி ரசம் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

இதையும் படிங்க: மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முட்டைகோஸ் சூப்.! எப்படி செய்யலாம்.!?

துளசி

ரசம் செய்ய தேவையான பொருட்கள்துளசி - ஒரு கப்
மிளகு,சீரகம் - 2டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
வர மிளகாய் - 2
மல்லி தழைகள், உப்பு, எண்ணெய், - தேவையான அளவு
புளி - எலுமிச்சை பழ அளவு,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு

Basil leaves

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வர மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி தழைகள் போட்டு ரசித்திற்க்கு ஏற்றவாறு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து  ஸ்டவ்வை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நுரை பொங்கி வரும் நேரத்தில் கொத்தமல்லி தழைகளை தூவி சிறிதளவு உப்பு போட்டு இறக்கினால் சுவையான ஆரோக்கியமான துளசி ரசம் தயார்.

இதையும் படிங்க: தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யும் பெருஞ்சீரகம்.. எப்படி பயன்படுத்தலாம்.!?