சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
வாய்ப்புண் பிரச்சனையினால் அவதிப்படுறீங்களா.! சில வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.!?
பலரையும் பாதிக்கும் வாய் புண் பிரச்சனை
பொதுவாக வாய்ப்புண் பிரச்சனை என்பது நம்மில் பலருக்கும் ஏற்படும். வாய்ப்புண் வந்து விட்டாலே சாப்பிடுவது, பேசுவது, பல் துலக்குவது என பல விஷயங்களும் மிகவும் கடினமானதாக இருக்கும். வாய் புண்ணில் சிறியதாக ஏதாவது பட்டு விட்டால் கூட மிகவும் அதிகமாக வலி எடுக்கும். மேலும் இந்த வாய்ப்புண் இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
வாய் புண் வருவதற்கான காரணங்கள்
குடல் பகுதியில் புண்கள் இருந்தாலோ அல்லது அல்சர், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் வாய் பகுதிகளின் புண்கள் வரும். இவ்வாறு ஏற்படும் வாய்ப்புண்களை குணப்படுத்துவதற்கு உடனடியாக மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் வாய்ப்புண் எளிதில் குணமாகாது. வாய்ப்புண்களை குணப்படுத்த வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து எளிதில் சரி செய்யலாம். இதைக் குறித்து இப்பதியில் விளக்கமாக பார்க்கலாம்?
இதையும் படிங்க: நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்டும் ஏலக்காய்.! எப்படி பயன்படுத்தலாம்.!?
வாய் புண்ணை சரிசெய்ய என்ன செய்யலாம்?
1. தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு நெய் அல்லது வெண்ணையை வாய் புண் இருக்கும் இடத்தில் மற்றும் உதடுகளின் மீது தேய்த்து விட்டு தூங்கினால் வாய் புண் உடனடியாக குணமாகும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள கிருமிகள் நீங்கி வாய் புண்கள் விரைவில் குணமாகும்.
3 கொய்யா இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் வாய் புண், வயிற்று புண் குணமாகும்.
4. தினசரி உணவில் நீர் சத்து மற்றும் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
5. காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை என்பதை தவிர்க்க வேண்டும்.
6. பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகள், சோடா பானங்கள் போன்றவற்றை குடிக்க கூடாது. மேலே குறிப்பிட்டவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே வாய் புண் எளிதில் குணமாகும்.
இதையும் படிங்க: வாயு தொல்லையா.! உடனடி தீர்வு.. இந்த ஒரு லேகியம் போதும்.!?