உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ எளிய உணவு முறைகள்.!



How reduce bad cholesterol in our body

நமது உடலுக்கு கொழுப்பு சத்து மிகவும் முக்கியமானது. ஆனால் கெட்ட கொழுப்பு உடலில் அதிகமாக சேர்வதால் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இதனால் பலவிதமான நோய்களும் நம்மை தாக்குகிறது.

எனவே, கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்றி, நல்ல கொழுப்பு சத்தை அதிகரிக்க என்னென்ன உணவு முறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

Cholesterol

கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் இருக்க தினமும் காலையில் தானிய உணவு மற்றும் ஓட்ஸ் சாப்பிட வேண்டும். அதேபோல் ரத்த நாளங்களில் கொழுப்பை குறைக்க சால்மன் மற்றும் டுனா மீன்களை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

அதேபோல் பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் அக்ரூட் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கலாம். மேலும், சமையலில் சுத்தமான சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கலாம்.

Cholesterol

அதிலும் குறிப்பாக மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே தினமும் சரியான ஓய்வு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.