தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இரவில் நெஞ்செரிச்சல் தொல்லையா? இதையெல்லாம் தவிர்த்திடுங்க.?
பலருக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருப்பது நெஞ்செரிச்சல். குறிப்பாக இதுபோன்ற தொந்தரவுகள் இரவில் தான் ஏற்படுகிறது. எனவே, இவ்வாறு ஏற்படும் நெஞ்செரிச்சலை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, செரிமானவுடன் இரைப்பைக்கு கொண்டு செல்லும். அந்த இரைப்பையில் உள்ள கதவு அமிலத்தை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும். இந்த கதவு உணவு குழாய்க்கும், இரைப்பைக்கு இடையில் இருக்கும் ஒரு எல்லைக்கோடு போல் இயங்குகிறது.
ஆனால், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை தாங்குமே தவிர அமிலத்தை தாங்கும் சக்தி கிடையாது. சாப்பிட்டவுடன் வலது பக்கமாக படுத்தால் இடுப்பை சுற்றி இருக்கும் இடது பக்க குடல் இரைப்பையை அழுத்தும்.
அதன் காரணமாக உணவும், அமிலமும் சேர்ந்து உணவு குழாய்க்கு வந்து விடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. எனவே, எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலா அதிகம் உள்ள உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டாலும் உடனடியாக படுக்க கூடாது. சாப்பிட்ட உடன் குறைந்தது 2 மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும். இதனை கடைப்பிடித்தாலே நெஞ்செரிச்சல் ஏற்படுவதை எளிதாக தடுக்கலாம்.