தூக்கி வீசும் ஆரஞ்சு தோலில், அழகை தரும் துவையல்.. ருசியோ பயங்கரம்.!



orange skin chutney for healthy

அழகும் ஆரோக்கியமும் தரும் ஆரஞ்சு தோல்

நாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசி விடுவோம். ஆனால், அதில் நீரிழிவு நோய்க்கு எதிரான சக்தியும், உடல் பருமனை குறைக்கக்கூடிய திறனும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 

ஆரஞ்சு தோலில் இருக்கும் எண்ணெய் வித்துக்கள் தோல் புற்றுநோயை எதிர்த்து போராட உதவும். மேலும், இது நமது உடலுக்கு அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்க்கும். அப்படிப்பட்ட ஆரஞ்சு தோலை கொண்டு சூப்பரான சுவையில் துவையல் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க. 

இதையும் படிங்க: தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!

தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறிதளவு 

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - இரண்டு 

பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் - ஒரு கைப்பிடி 

உப்பு மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப.

orange skin

செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஆரஞ்சு தோல்களை சேர்த்து நன்றாக வதக்கவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, அதே கடாயில் மேலும், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய ஆரஞ்சு தோல், காய்ந்த மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்து தாளித்தால் சூப்பரான ஆரஞ்சு தோல் துவையல் ரெடி. இதை சூடான சாதத்துடன் சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: மூக்கு பகுதியில் கருப்பு புள்ளிகள் இருக்கா? அகற்ற செய்ய வேண்டியது என்ன? டிப்ஸ் உள்ளே.!