மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?
பலரது வீடுகளிலும் சப்பாத்தி மற்றும் பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா செய்வார்கள். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் ஒரே ஸ்டைலில் உருளைக்கிழங்கு குருமா செய்யும் போது குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பார்கள். எனவே கொஞ்சம் வித்தியாசமாக உருளைக்கிழங்கு குருமா இப்படி ஒரு முறை செய்து பாருங்க?
உருளைக்கிழங்கு
குருமா செய்ய தேவையான பொருட்கள்எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், பட்டை - 2 துண்டு, கிராம்பு - 4, ஏலக்காய் - 2, சோம்பு - 1 டீஸ்பூன், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது), பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன், மல்லித் தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, பேபி உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் நீக்கியது), தண்ணீர் - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
தேங்காய் - 2 சில்லு, சோம்பு - 1/2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்,
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி தக்காளியை சேர்க்க வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடவும். இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா.!?
பின்னர் இதில் வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் அரைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் அரைத்து இந்த குருமாவில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.
இதையும் படிங்க: இதய தமனிகளின் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சியா விதைகள்.? எப்படி பயன்படுத்தணும் தெரியுமா.!?