மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புளியோதரையில் இருந்து எடுத்த மிளகாய் வற்றலை வைத்து இந்த இஞ்சி சட்னி ட்ரை பண்ணி பாருங்க.!?
புளியோதரை மிளகாய் வற்றல் இஞ்சி சட்னி
பலரது வீடுகளிலும் காலை அல்லது இரவு உணவிற்காக புளியோதரை செய்வார்கள். அந்த புளியோதரையில் காரத்திற்காக சேர்க்கப்படும் வத்தல் மிளகாயை பலரும் தட்டில் ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். இவ்வாறு ஓரமாக ஒதுக்கி வைக்கப்படும் மிளகாய் வற்றலை வைத்து சுவையான இஞ்சி சட்னியை ட்ரை பண்ணி பாருங்க. புளியோதரை மசாலாவுடன் ஊறிய இந்த மிளகாய் வற்றலை வைத்து இஞ்சி சட்னி செய்யும் போது சுவை வேற லெவலில் இருக்கும்.
இஞ்சி
சட்னி செய்ய தேவையானப் பொருட்கள்:
புளியோதரையிலிரந்து எடுத்த மிளகாய் வற்றல் - அதில் கிடைத்த அளவு.
மிளகாய் வற்றல் - தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி - கட்டை விரல் அளவில் பாதி,
கருவேப்பிலை, கொத்தமல்லி - 1/2 கப்
அளவுக்கு
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
இதையும் படிங்க: காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செய்து கொடுத்து பாருங்க.!?
செய்முறை
:
மேலே குறிப்பிட்ட பொருட்களை அனைத்தையும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி ஆறவைத்து கொள்ளவும். ( உப்பு, பெருங்காயம் தவிர) பின்னர் அதை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். நன்றாக அரைத்தப் பிறகு வாணலியில் ஒரு மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பின்னர் அரைத்த சட்னியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வாணலியில் சட்னியை கொட்டி கலந்துகொதிக்க விட்டு இறக்கினால் புளியோதரை மிளகாய் வற்றல் இஞ்சி காரச் சட்னி ரெடி. இந்த சட்னி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் தோசைக்கு புளி சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?