#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெற்றோர்களே.! உங்கள் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் குடுக்கிறீங்களா.? உங்களுக்கு தான் இந்த செய்தி.!?
ஐஸ் கிரீம்
பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கோடை காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் சுவையுடனும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் இதை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். ஐஸ்கிரீமில் ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட் என பல சுவைகள் இருக்கின்றன. முன்பெல்லாம் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து ஐஸ்கிரீம்களை தயார் செய்தனர்.
ஐஸ்கிரீமில் கலக்கப்படும் கெமிக்கல்கள்
ஆனால் தற்போது ஐஸ்கிரீம் நீண்ட நேரம் உறைந்து இருப்பதற்காக பலவகையான கெமிக்கல்களும், கலவைகளும் கலந்து விற்று வருகின்றனர். குறிப்பாக ஐஸ்கிரீமில் உள்ள இனிப்பிற்காக பிரக்டோஸ் கார்ன் சிரப், குளுக்கோஸ் சிரப் பயன்படுத்தபடுகிறது. இதில் உள்ள நுரை போன்ற அமைப்பிற்கு சோப் கலவை மற்றும் சோடா கலவை பயன்படுத்தப்படுகிறது. மேலும் தாவர எண்ணெய், டால்டா போன்றவைகளும் பயன்படுத்தபடுகிறது.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதி..! 25 பேர் கவலைக்கிடம்..!!
கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்ட ஐஸ் கிரீம் எப்படி கண்டுபிடிக்கலாம்
கடைகளில் வாங்கிவந்த ஐஸ் கிரீமில் சிறிதளது எலுமிச்சை சாறு ஊற்றினால் பொங்கி வரும் அல்லது உப்பு கலந்த தண்ணி சிறிதளவு ஊற்றினால் நிறம் மாறும். இவ்வாறு அமிலங்கள் பயன்படுத்தப்பட்ட ஐஸ்கிரீமை எளிதாக கண்டறியலாம். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீமை குழந்தைகளுக்கு வாங்கி தராமல் வீட்டிலேயே செய்து தருவது நல்லது.
இதையும் படிங்க: மதுரையில் பரபரப்பு.! ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை! ஆசைஆசையாக சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்.!