காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது.? ஏன் தெரியுமா.!?



Should not eat sprouts at empty stomach

முளைகட்டிய பயிர்கள்

தற்போதுள்ள ஆரோக்கியமான உணவுகளை தேடி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு துரித உணவுகள் நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளன. நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளுடன் சேர்த்து முளைகட்டிய பயிர்களையும் உண்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

Sprouts

யார் யார் சாப்பிடலாம் ?

மேலும் ஜிம்மிற்கு செல்பவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே முளைக்கட்டிய பயிர்களை தினமும் சாப்பிட்டு வரலாம். இதில் வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகள், பாக்டீரியாக்கள் நம் உடலை தாக்காமல் பாதுகாக்கிறது.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைகளுக்கு நியாபக சக்தியை அதிகரிக்க இந்த பாலை தினமும் காலையில் கொடுத்து பாருங்க.!?

Sprouts

வெறும் வயிற்றில் ஏன் சாப்பிட கூடாது

ஆனால் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கூறப்படுவது, முளைகட்டிய பயிர்களை தண்ணீரில் நீண்ட நேரம் வைத்து முளை கட்ட வைப்பதால் வைட்டமின் காரணமாக ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் நம் குடலில் அதிகமாக அமிலங்கள் சுரப்பு நடைபெறும்.

மேலும் இதனுடன் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள முளைகட்டிய பயிர்களை சாப்பிடும் போது வயிற்றுப் பகுதியில் அமிலத்தன்மை அதிகமாகிவிடும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காலை உணவை சாப்பிட்டுவிட்டு இதனுடன் முளைகட்டிய பயிர்களை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நோய்களை ஓட ஓட விரட்டும் மருத்துவ குணம் நிறைந்த அதிசய பூ.? எப்படி பயன்படுத்தலாம்.!?