மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்கள் குழந்தைகளுக்கு நியாபக சக்தியை அதிகரிக்க இந்த பாலை தினமும் காலையில் கொடுத்து பாருங்க.!?
மூளையின் செயல்பாடு
நமது உடலில் மூளை முக்கிய உறுப்பாக இருந்து வருகிறது. மூளையில் உள்ள நரம்புகளில் செயல்பாடுகளினாலேயே நம் உடல் இயங்குகிறது. மூளை தன் வேலையை செய்யாவிட்டால் நம் உடலில் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதில் குறிப்பாக நியாபக மறதியால் அதிகமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மூளையில் ஏற்படும் ஒருவித குறைபாட்டினால் நியாபக மறதி ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து பாலின் நன்மைகள்
நம் மூளையில் பெருமூளை, சிறுமூளை என்ற இரண்டு பிரிவுகள் உள்ளது. நாம் செய்யக்கூடிய செயலை ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும், நாம் ஒரு செயலை செய்வதற்கும் உடலுக்கு கட்டளையிடுவது மூளையின் முக்கிய வேலையாகும். அப்படிப்பட்ட மூளையை கூர்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு இந்த ஊட்டச்சத்து நிறைந்த பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வரலாம். குறிப்பாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பால் தரும் போது உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகமடைந்து நியாபக மறதி குறைகிறது.
இதையும் படிங்க: இயற்கையாக வயிற்றை சுத்தம் செய்ய இந்த 3 பானங்களை மட்டும் குடித்து பாருங்க.!?
ஊட்டச்சத்து
நிறைந்த பால் செய்ய தேவையான பொருட்கள்பால், பாதாம், மஞ்சள் தூள், வால்நட், தேன்
செய்முறை
பாதாம் மற்றும் வால்நட் பருப்புகளை ஒரு கடாயில் மிதமான தீயில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். இதை ஒரு டம்ளரில் ஊற்றி மஞ்சள் தூள், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு அரைத்த பொடிகளை சேர்த்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு தினமும் காலையில் குடிக்க கொடுத்தால் மூளை வளர்ச்சி அடைவதோடு, நியாபக சக்தியும் அதிகரிக்கும்..
இதையும் படிங்க: நோய்களை ஓட ஓட விரட்டும் மருத்துவ குணம் நிறைந்த அதிசய பூ.? எப்படி பயன்படுத்தலாம்.!?