திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே ஒரு முறை இதை மட்டும் செய்து பாருங்கள்... சமையல் கட்டில் இருக்கும் பல்லியை கொல்லாமல் எப்படி ஓட ஓட விரட்டுவது? அருமையான டிப்ஸ்!!
ஒரே ஒருமுறை பல்லி சமையல் கட்டில் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஆரம்பித்து விடும். அதனால் குட்டி குட்டி பல்லிகள் அங்கும் இங்குமாக ஓட துவங்கிவிடும் இப்படி பல்லியின் அட்டகாசம் சமையல் கட்டில் இருந்தால் நாம் சமைக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பது என்பது கடினம் ஆகிவிடும். அப்படியாக சமையல் கட்டில் இருக்கும் பல்லியை கொல்லாமல் எப்படி ஓட ஓட விரட்டுவது? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
முதலில் ஒரு பிளாஸ்டிக் பௌல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 மூடி டெட்டால், அரை எலுமிச்சை சாறு கலந்து எடுத்து கொள்ளவும். பின்னர் நான்கு பூண்டு மற்றும் அரை வெங்காயத்தை சேர்த்து இடித்து அதிலிருந்து வரும் சாற்றில் 2 டீ ஸ்பூன் எடுத்து கொள்ளவும். இதனுடன் உங்களிடம் இருந்தால் நான்கைந்து புதினா இலைகளையும் சேர்க்கலாம்.
பின்னர் இந்த கலவையில் ஒரு பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை நனைத்து உருண்டையாக சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சிறிய தட்டுகளில் வைத்து எங்கெல்லாம் பல்லி நடமாட்டம் இருக்கிறதோ, அங்கே எல்லாம் வைத்து விடலாம் அல்லது வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் பல்லிகள் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும் ஒரு பல்லி கூட இந்த வாசத்திற்கு அந்த பக்கம் வராது.