"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இயற்கையாக வயிற்றை சுத்தம் செய்ய இந்த 3 பானங்களை மட்டும் குடித்து பாருங்க.!?
ஆரோக்கியமான உணவும் வாழ்க்கை முறையும்
தற்போதுள்ள நவீன உணவை ஆரோக்கியமான உணவை தேடி உண்ணுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மிகவும் அவசியம். ஆனால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். இதனால் பல நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
குறிப்பாக இவ்வாறு ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதால் வயிற்றில் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் செரிமான பிரச்சனை, அல்சர், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதற்கு ஆங்கில மருத்துவ முறைப்படி பல சிகிச்சைகள் செய்து வந்தாலும் பக்க விளைவுகள் கொடுக்கும் என்பதால் இந்த 3 வகையான பாணங்கள் குடித்து வருவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலுமாக குணமடையும்.
இதையும் படிங்க: மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புத உணவுகள்.? என்னென்ன தெரியுமா.!?
வயிற்றை சுத்தம் செய்யும் பானங்கள்
1.காய்கறி ஜூஸ் - மருத்துவ ஆய்வறிக்கையின்படி கேரட், பீட்ரூட், தக்காளி, காலிபிளவர், புரோக்கோலி, கீரை போன்ற காய்கறிகளை ஜூஸாகவோ அல்லது சூப் செய்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைகின்றன என்பது தெரியவந்துள்ளது.
2. ஆப்பிள் ஜூஸ் - தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவர்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பழமொழியே உள்ளது. இதன்படி ஆப்பிள் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கி வயிற்றில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
3.எலுமிச்சை சாறு - எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதுடன், வயிற்றில் தேங்கி இருக்கும் மலத்தை உடனடியாக வெளியேற்றுகிறது. வயிறு வலி செரிமான பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடித்து வரலாம்.
இதையும் படிங்க: உங்கள் உடம்பில் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதா.? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!