புத்துயிர் பெறப்போகும் குடியாத்தம் நகரம்; எம்.பி கதிர் ஆனந்த் மாபெரும் சாதனை..! மனதார பாராட்டும் தொகுதி மக்கள்.!



gudiyatham-city-outer-ring-road-by-mp-kathir-anand

 

மக்கள் பணிகளும், திட்டங்களும் தொய்வின்றி தொடர ஏப்ரல் 19ம் தேதி கதிர் ஆனந்த்-க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாக தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிகிறது. இதனால் தொகுதி வாரியாக பிரச்சார நிகழ்வுகள் களைகட்டி, அரசியல் பரபரப்பு உண்டாகி இருக்கிறது. 

அறுதிப்பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி வெல்லும்:

அகில இந்திய அளவில் கிளம்பியுள்ள மோடி எதிர்ப்பு அலையின் காரணமாக, காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. மாநில அளவில் மக்கள் நலப்பணிகளை செவ்வனே செய்து வரும் திமுக தலைமையிலான கூட்டணி, மீண்டும் அறுதிப்பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் கணிசமான சூழல் இருக்கிறது. 

Kathir Anand

ஆனால், பாஜக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி என மூன்று முக்கிய அணிகள் தனித்தனியே நின்று இம்முறை களம்காணுவதால் அரசியல் நிலவரம் ஒவ்வொரு கட்சிக்கும் போட்டித்தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், வேலூர் மக்களவை தொகுதியில், திமுக சார்பில் மீண்டும் நாடாளுமன்ற வேட்பாளராக கதிர் ஆனந்த் (Kathir Anand) போட்டியிடுகிறார். 

மக்கள் நலப்பணிகளை கூறி வாக்கு சேகரிப்பு: 

கடந்த 5 ஆண்டுகளில் சத்துவாச்சாரி சுரங்கப்பாதை, கே.வி குப்பம் சுங்கச்சாவடி அகற்றம் உட்பட பிற நலப்பணிகள் செய்தவற்றை மக்களுக்கு நினைவூட்டி அவர் செல்லும் இடமெல்லாம் வாக்குகளை சேகரித்து வருகிறார். கதிர் ஆனந்த் செல்லும் இடங்களில் மக்களும், கூட்டணிக் கட்சியினரும் திரளாக வரவேற்பு அளித்து, மீண்டும் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அரியணையில் அமர்த்துவதாக வாக்குறுதி அளித்து இருக்கின்றனர். 

இந்நிலையில், குடியாத்தம் தொகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்த வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகளை, எம்.பி கதிர் ஆனந்த் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கையாக வைத்து அதற்கான பணிகளை தொடங்கினார். இப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 

Kathir Anand

ரூ.225 கோடி செலவில் தொகுதி & பொது மக்களுக்காக வெளிவட்ட சாலை:

விரைவில் குடியாத்தம் வெளிவட்ட சாலை செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், அந்நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி தங்களின் பயணத்தை மேற்கொள்ளலாம். இதனால் தாங்கள் பெரும் ஆவலுடன் வெளிவட்ட சாலை பணிகள் நிறைவுறுவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் மகிழ்ச்சிப்பட கதிர் ஆனந்துக்கு நன்றி தெரிவித்து இருக்கின்றனர். 

ரூ.225 கோடி செலவில் உருவாகும் வெளிவட்ட சாலை மற்றும் கூடியதா நகர மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான தரம் உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகளும் குடியாத்தம் நகரில் நடைபெறுகிறது. இந்த பணிகளுடன் எதிர்கால பணிகள் செவ்வனே தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவும் கதிர் ஆனந்த் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.