குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பிரேக்கிங்: சற்றுமுன் கமல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். சினிமாவையும் தாண்டி தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கிவிட்டார் கமலஹாசன். தனது நண்பர், சக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்ட நிலையில் கமல் அதிரடியாக அரசியலில் இறங்கி கட்சியையும் ஆரம்பித்துவிட்டார்.
மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசன் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதோடு மக்களை சந்திப்பது, கள பணிகளில் ஈடுபடுவது என பயங்கர பிசியாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வருவதை ஓட்டி கமல் யாருடன் கூட்டணி வைப்பார், அல்லது யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என அதிரடியாக கூறினார் கமல்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 சட்ட மன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மைய கட்சி 18 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார் கமல்.